தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மாணவர்களே.., இத மறந்தும் செய்யாதீங்க.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மாணவர்களே.., இத மறந்தும் செய்யாதீங்க.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மேலும் தேர்வுகளில் எந்த ஒரு குழப்பமும் ஏற்படக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வினை சுமார் 7.15 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.


பொதுமக்களே உஷார்.,  நாளை இந்த பகுதிகளில் மின்தடை?? உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க!!!

இந்நிலையில் +2 மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 3,200 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வினாத்தாள்களை பாதுகாக்க 154 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தேர்வுக் கூடங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தேர்வு மையங்களில் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் வசதி, குடிநீர், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here