தாராளமாக உயரும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

0

நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதைப் போல, தங்கத்தின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அதன் வியாபாரம் குறைந்து விட்டாலும், மதிப்பு உயர்வதால் முதலீட்டாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் காரணமாக சுப நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடைபெற தொடங்கி உள்ளதால் தங்கத்தின் தேவை அதிகரித்ததும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக உள்ளது.

இன்றைய விலை:

கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் 3 மாதங்களுக்கு மேலாக நகைக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டதால், வியாபாரம் நடைபெறவில்லை. இந்த வருட அட்சய திருதியை அன்று கூட கடைகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் மறுபக்கம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதற்கு அதன் மீது முதலீடுகள் அதிகரித்ததே காரணம். கொரோனா அச்சத்தால் இறக்குமதி குறைந்த காரணத்தால் அதன் தேவை அதிகரித்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் ஊரடங்கு காலத்தில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை அதிகரித்தது. மேலும் வரலாறு காணாத அளவு சென்ற மாத நடுப்பகுதியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சிறிது சிறிதாக குறைந்து வந்த தங்கம், கடந்த சில நாட்களாக மீண்டும் மலையேற தொடங்கி உள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செப்.21 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ. 16 அதிகரித்து 4958 ரூபாய்க்கும், ஒரு சவரன் 128 ரூபாய் உயர்ந்து ரூ.39,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை சரிந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளி 300 ரூபாய் குறைந்து ரூ. 70,000க்கு விற்பனை ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here