புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021

1

இந்த 2020 ஆம் ஆண்டு முடிவுற்று 2021 இல் அடியெடுத்து வைக்கும் அனைவர்க்கும் enewz சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2020 ஆம் ஆண்டு பல சோதனைகளை கடந்து வந்தாலும் தொடங்க இருக்கும் இந்த 2021 நல்ல வருடமாக அமைய எங்கள் enewz சார்பில் இருந்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இதோடு எங்கள் enewz தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. தொடர்ந்து உங்களின் ஆதரவை
வழங்குவதற்கு நன்றி கூறுகிறோம்.

புத்தம் புது பூக்கள் தூவி புத்தாண்டை வரவேற்போம்
புதுக்காற்றை சுவாசிப்போம்

நலமும் வளமும் தரும் என
நம்பியே வாழ்த்திடுவோம்!!

புத்தாண்டு ஒரு புதிய ஆண்டாய்
மீண்டும் பிறப்பெடுப்போம்!!

தவழ்ந்து நடைபழகி புதியதாய்
ஒரு பாதை செய்வோம்!!

புதிய முயற்சிகள் செய்திடுவோம்!!
பழைய துயரங்கள் களைந்திடுவோம்!!

நல்லனவெல்லாம் நமதே என்று
நம்பிக்கை வளர்த்திடுவோம்!!

கனவுகள் மெய்யாக இயன்றவரை உழைத்திடுவோம்!!
இயன்றது இவ்வளவுதான் எனும் எண்ணத்தை உடைத்திடுவோம்

உறுதியுடன் உயர்ந்திடுவோம்!!
உண்மையுடன் வலம் வருவோம்!!

உலகம் நமதே என்று உரக்க குரல் கொடுப்போம்!!
உலகம் நாமே என்று உலகத்திற்கே காட்டிடுவோம்!!

இனியவர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here