2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுகிறதா.? மத்திய அரசு விளக்கம்..!

0

கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டது. தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வதந்திகள் பரவிய நிலையில் அந்த கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை:

2016 இல் மத்திய அரசு ஆணைப்படி 500, 1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டனர். இவற்றிற்கு மாற்றாக 500,2000 ரூபாய் தாள்கள் வெளியாகின. இது மக்கள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. உயர் மதிப்பு நோட்டுகள் தான் பண பதுக்கலுக்கும் ஊழலுக்கும் காரணமாக கூறப்பட்ட நிலையில் 2000 ரூபாய் தாள்கள் மட்டும் எப்படி ஊழலை கட்டுப்படுத்தும் என்று மக்கள் மனதில் அதிக கேள்வியை எழுப்பியது.

ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காகவே பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு பின்னர் மாற்றிப் பேசியது.

ஏடிஎம்-இல் 2000 ரூபாய்:

2000 ரூபாய் நோட்டுகள் வந்தவுடன் ஊழல்கள் அதிகரித்திருப்பதாகவும், ஊழல்களில் அதிகமாக 2000 ரூபாய் நோட்டுகளாகவே இருப்பதாக புகார்கள் வெளிவந்தன. இதனால் 2000 ரூபாயை நீக்க போவதாக செய்திகள் பரவின. மேலும் சில வங்கிகள் தங்களது ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நீக்கிவிட்டு ரூ.200, ரூ.500 நோட்டுகளை வைப்பதாகக் கூறின.

2000 ரூபாய் நீக்கப்படுமா??

இந்நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து அச்சிடுவதை நிறுத்துவது குறித்து எந்த திட்டமும் தற்போது இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மார்ச் 16ம் தேதியில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்துவதற்கு தற்போது திட்டம் எதுவும் இல்லை.

மக்களிடையே சில்லறைத் தட்டுப்பாடு இருப்பதால் 2,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.200, ரூ.500 நோட்டுகளை ஏடிஎம்களில் அதிகமாக வைக்கும் பணியில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மட்டும் ஈடுபட்டன” என்று விளக்கம் அளித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here