LPG சிலிண்டருக்கு ரூ.200 மானியத் தொகை.., மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!

0
LPG சிலிண்டருக்கு ரூ.200 மானியத் தொகை.., மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!
LPG சிலிண்டருக்கு ரூ.200 மானியத் தொகை.., மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு.., மத்திய அரசு அறிவிப்பு!!

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

LPG சிலிண்டர்

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் சிலிண்டரின் அத்தியாவசியம் அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசால் சமையல் சிலிண்டர் மானியத்துடன் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மானிய தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு LPG சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியமாக வழங்கப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இத்திட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீடித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களுக்குள்ள இவளோ பெரிய மாற்றத்தை நாங்க எதிர்பார்க்கவே இல்லை மீனா.., அவரே வெளியிட்ட வீடியோ!!

இத்திட்டத்தின் கீழ் சுமார் 9.59 கோடி PMUY குடும்பங்கள் பயன் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் “பொருளாதார அமைச்சரவை குழு மக்களுக்கு PMUY திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 14.2 கிலோ சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here