இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை – இந்திய மருத்துவ ஆராய்ச்சி தகவல்!!

0
இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி தகவல்!!
இந்தியாவில் ஒரே நாளில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி தகவல்!!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் நாட்டில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா தொற்றினை குறைக்கும் வகையில் தடுப்பூசி மற்றும் பரிசோதனை பணிகளை விரிவுபடுத்துமாறு மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் கிராமம் முதல் நகரங்கள் வரை பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது.

கொரோனா பரிசோதனை:
கொரோனா பரிசோதனை:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நாட்டில் பரிசோதனைகள் அதிகப்படுத்துவதன் காரணமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது. தற்போது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனை குறித்த தகவலை இந்திய மருந்து ஆய்வகம் தெரிவித்துள்ளது.அதன்படி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 15,73,515 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 31,64,23,658 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here