Saturday, June 19, 2021

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

Must Read

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும் மக்களை அறிவுத்தி உள்ளார்.
திருமணம் நடத்த அனுமதி இல்லை:

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் திருமண நிகழ்ச்சிகளை வீடுகளில் மட்டுமே நடத்த வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில்  மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.  ஊரடங்கு கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


ஒட்டு மொத்தமாக இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து120 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எதிர்பார்ப்பதைவிட மெதுவாகவே குறையும், அதற்கு ஜூலை மாதம் வரை ஆகலாம் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நோய் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களை செயல்ப்படுத்திவருகின்றன. இந்த சூழலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் இவ்வறிப்பை விடுத்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

‘தம்மு அடிச்சதே இல்லனு சொல்ல முடியாது’ – உண்மையை போட்டு உடைத்த பாரதி கண்ணம்மா வெண்பா!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தற்போது சூப்பரான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -