மும்பை இந்தியன்ஸுடன் 12 வருட பயணத்தை நிறைவு செய்த ஹிட் மேன்…, வைரலாகும் வீடியோ பதிவு!!

0
மும்பை இந்தியன்ஸுடன் 12 வருட பயணத்தை நிறைவு செய்த ஹிட் மேன்..., வைரலாகும் வீடியோ பதிவு!!
மும்பை இந்தியன்ஸுடன் 12 வருட பயணத்தை நிறைவு செய்த ஹிட் மேன்..., வைரலாகும் வீடியோ பதிவு!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து 12 வருடங்கள் ஆனது குறித்து வெற்றி கேப்டனாக வலம் வரும் ரோஹித் சர்மா தனது மகிழ்ச்சிகாரமான கருத்தை வெளியிட்டுள்ளார்.

ரோஹித் சர்மா:

இரு தரப்பு தொடர்களில் அதிக வெற்றிகளை பெற்ற இந்திய அணியை, ரோஹித் சர்மா வழிநடத்தி உள்ளார். இதன் மூலம், SENA நாடுகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் தோனி சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். இவர், இந்திய அணியை மட்டுமல்லாமல், ஐபிஎல்லில் மும்பை அணியையும் சிறப்பாக வழி நடத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த 2011ம் ஆண்டு மும்பை அணியில் இணைந்த இவர், ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 2013 ஆம் ஆண்டு அணியில் இருந்து விலகிய பிறகு, இவரது இடத்தை பிடித்தார். இதே ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இவர், கேப்டன் ஆனது முதல் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம், மிகவும் வெற்றி காரமான கேப்டனாக ரோஹித் சர்மா வலம் வருகிறார்.

இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து அசத்தும் மும்பை…, கேரளாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்து அபாரம்!!

இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து, நேற்றுடன் 12 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மும்பை இந்தியன்ஸ்(MI) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஹித் சர்மாவின் 12 வருட பயணத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளது. இது குறித்து ரோஹித் சர்மா, MI யுடன் இணைந்து 12 வருடங்கள் ஆனதை நம்ப முடியவில்லை. இந்த குடும்பத்துடன் இணைந்து பல இளம் வீரர்களுடன் பயணித்தது என அனைத்தும் மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here