இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து அசத்தும் மும்பை…, கேரளாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்து அபாரம்!!

0
இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து அசத்தும் மும்பை..., கேரளாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்து அபாரம்!!
இந்தியன் சூப்பர் லீக்கில் தொடர்ந்து அசத்தும் மும்பை..., கேரளாவுக்கு எதிராக கோல் மழை பொழிந்து அபாரம்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், மும்பை சிட்டி அணியானது கேரளா அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் 11 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், அனைத்து அணிகளும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா ஒரு முறை போட்டியிட்டு முடிந்துள்ளன. இதனை தொடர்ந்து, 2வது லீக் சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், மும்பை சிட்டி அணிக்கு எதிராக கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நேற்று மோதியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், இதுவரை தோல்வியை சந்திக்காத மும்பை சிட்டி அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இந்த போட்டியின் முதல் பாதியிலேயே, மும்பை சிட்டி அணியின், ஜார்ஜ் பெரேரா தியாஸ் 4வது மற்றும் 22 வது நிமிடத்தில் 2 கோல்களை அடித்து அசத்தினார். இதற்கிடையில், 10வது மற்றும் 16 வது நிமிடத்தில், கிரெக் ஸ்டீவர்ட் மற்றும் பிபின் சிங் தூணோஜம் மும்பை சார்பாக இரு கோல்களை அடித்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்திய அணியின் நிலை என்ன? முழு விவரம் உள்ளே!!

இதனால், மும்பை சிட்டி அணி முதல் பாதியில், 4-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், மும்பை சிட்டி அணியானது 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், மும்பை சிட்டி அணி 33 புள்ளிகளுடன் தோல்வியை சந்திக்காமல் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கேரளா அணியானது, 25 புள்ளிகளுடன் 3வது இடத்தை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here