‘குழந்தைகள் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு இந்த எண்ணை தான் அழைக்க வேண்டும்’ – அரசு வெளியிட்ட அதிரடி மாற்றம்!!

0

இந்தியாவில், மிஷன் வட்ஸாலயா என்ற திட்டத்தின் படி 1098 என்ற உதவி எண் 112 என்ற எண்ணுடன் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றம்:

1098 அவசர தொடர்பு எண்ணுக்கு அழைப்பு விடுத்தால், வீதிகளில் வாழும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கும் சைல்டு லைன் இந்தியா பவுண்டேஷனை தொடர்பு கொள்ளலாம். இந்தியா முழுக்க அவசர உதவியை எதிர்நோக்கும் குழந்தைகளை காப்பாற்றவே 1098 அவசர உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் அவசர உதவி மையத்தின் எண்ணை மத்திய அரசு, சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112 உடன் இணைத்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற அனைத்துவிதமான அவசர அழைப்புகளுக்கான எண்ணுடன் இணைக்க உள்ளது. மேலும் 112 இந்தியா செயலியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், சிடாக் என்ற மத்திய உயர் கணினி மேம்பாட்டு மையம் உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்த மாற்றம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 26 ஆண்டுகளாக குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த எண்ணை மாற்றி புதிய எண்ணை அறிவித்த்தால் அது குற்றங்கள், புகார்கள் தெரிவிக்கப்படும் அளவை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here