Sunday, May 12, 2024

1000 வருடங்கள் பழமையான தங்க நாணயங்கள் – இஸ்ரேலில் கண்டுபிடிப்பு!!

Must Read

3000 வருடங்கள் பழமையான தங்க நாணயங்கள் இஸ்ரேல் நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க நாணயங்கள்:

கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வாலிபர்கள் சிலர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டின் அருகே உள்ள இடத்தில் இந்த ஆராய்ச்சியை நடத்தி உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர் யார் என்று இன்னும் தெரியவில்லை. அவர்கள் அப்படி அந்த இடத்தை தோண்டி பார்க்கும் போது ஒரு மண்பானை இருந்துள்ளது. அதில் பல தங்க நாணயங்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைத்த வாலிபர்கள் அதனை அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனை முறையாக ஆராய்ச்சி செய்த அரசு தெரிவித்தது என்னவென்றால் “இந்த தங்க நாணயங்களை புதைத்து வைத்தவர் அதனை பாதுகாப்பாக முடித்து வைத்துள்ளார். அதே போல் அதனை முறையாக பதுக்கியும் வைத்துள்ளார்.”

மெல்லிசான தங்க நாணயங்கள்:

இலையை போல் அந்த தங்க நாணயங்கள் மிகவும் மெல்லிசாக இருக்கிறது. மிகவும் பழமையான இந்த தங்க நாணயங்களை பார்ப்பதற்கு ஆச்சிரியமாக உள்ளது. அது 24 கேரட் தங்க நாணயங்கள்.

அதே போல் இது மிகவும் அரிய வகை தங்கம். இந்த தங்கத்தை புதைத்தவர் அதனை பயன்படுத்தி இருந்தால் அழகான மற்றும் செல்வமிக்க ஒரு வீட்டை வாங்கியிருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தங்க நாணயங்கள் குறித்து வாலிபர் ஒருவர் கூறுகையில் “அதனை நாங்கள் முதலில் தங்க நாணயங்கள் என்று நம்பவில்லை. அருகில் சென்று உற்று பார்த்தபோது தான் தங்கம் என்று எங்களுக்கு தெரிந்தது” என்று கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -