ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் – இன்று முதல் விநியோகம்!!

1
500 rupees
500 rupees

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவி அவரவர் வீட்டிற்கே சென்று வழங்கப்பட உள்ளது.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, தொற்று அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரண உதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Ration Card
Ration Card

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஃபேவிஃபிராவிர் மருந்து – இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல்..!

அதன்படி இன்று முதல் ஜூன் 26ம் தேதி வரை ரேஷன் ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று 1000 ரூபாய் நிவாரணத்தை வழங்க உள்ளனர். இதனால் 5 நாட்களுக்கு ரேஷன் கடைகள் செயல்படாது எனவும் ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பெறாதவர்களுக்கு ஜூன் 27ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here