தமிழகத்தில் 100 பேருந்துகள் அதிகரிக்கப்படும் – பயணிகள் அதிகம் வருகையால் போக்குவரத்து துறை முடிவு!!!

0
தமிழகத்தில் 100 பேருந்துகள் அதிகரிக்கப்படும் - பயணிகள் அதிகம் வருகையால் போக்குவரத்து துறை முடிவு!!!
தமிழகத்தில் 100 பேருந்துகள் அதிகரிக்கப்படும் - பயணிகள் அதிகம் வருகையால் போக்குவரத்து துறை முடிவு!!!

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டிருந்தது, பின் இப்பொழுது கொரோனாவின் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஒரு சில தளர்வுகளும் நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 50சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்க அரசு உத்தரவிட்டதன்படி. அதிக தொலைவு செல்லும் பேருந்துகள் எண்ணிக்கை கம்மியாகவும் பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் 100 பேருந்துகளை கூடுதலாக பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.

100 பேருந்துகள் கூடுதலாகா இயக்கப்படும்…

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இந்நிலையில் தமிழக அரசு நோய் பரவலை தடுக்க அனைத்து விதமான முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்தது , இதனால் நோய் தொற்று குறைந்து வந்தது, பின் தளர்வுகளையும் படிப்படியாக குறைத்து, மாவட்டங்கள் வாரியாக பேருந்துகள் இயக்கவும் அனுமதி அளித்து, அதில் கொரோன பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு 28ஆம் தேதியிலிருந்து 50சதவீத பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க அனுமதியளித்தது.உள்ளூர் பயணிகள் குறைந்தளவில்தான் பயணம் செய்து வருகின்றனர், ஆனால் தொலைதூரம் செல்லும் பேருந்துகள் எண்ணிக்கை கம்மியாகவே இருக்கின்றது

 

100 பேருந்துகள் கூடுதலாகா இயக்கப்படும்...
100 பேருந்துகள் கூடுதலாகா இயக்கப்படும்…

ஆனால் பயணிகளை எண்ணிக்கை அதிகம் இருப்பதால் 300 பேருந்துகள் இயங்கிய இடத்தில இப்பொழுது 100 பேருந்துகள் கூடுதலாக இயக்க அனுமதி அளித்துள்ளது.அதுமட்டுமில்லாமால் பயணிகள் மற்றும் போக்குவரத்து துறையினர் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் அறிவிருத்தியுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டிலிருந்து விழுப்புரம், கும்பகோணம், சேலம், போக்குவரத்து கழக பேருந்துகள் அதிகமாக இயங்குகிறது, மற்றும் ஆம்னி பஸ்களும் இன்று முதல் இயக்கப்படும், கடந்த 3 நாட்களாக அந்தளவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கவில்லை காரணம் காலாண்டு வரி சலுகை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று முதல் புது காலாண்டு வரி இன்று தொடங்கியுள்ளதால் பல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வெளியூருக்கு பேருந்துகளை இயக்க உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here