கார்த்திக் ராஜ் நடிக்கும் ரீமேக் சீரியல் – ஹீரோயின் யார் தெரியுமா? பெயருடன் வெளியான சூப்பர் அப்டேட்!!

0
கார்த்திக் ராஜ் நடிக்கும் ரீமேக் சீரியல் - ஹீரோயின் யார் தெரியுமா? பெயருடன் வெளியான சூப்பர் அப்டேட்!!
கார்த்திக் ராஜ் நடிக்கும் ரீமேக் சீரியல் - ஹீரோயின் யார் தெரியுமா? பெயருடன் வெளியான சூப்பர் அப்டேட்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள, புத்தம் புதிய ரீமேக் சீரியல் ஒன்றில் செம்பருத்தி புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

புதிய அப்டேட்:

சீரியல்கள் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தான் எனும் அளவிற்கு, இவை மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் தான், டிஆர்பி ல் எப்போதும் முன்னிலை பெறும். ஆனால், ஜீ தமிழ் தற்போது பல்வேறு புதிய உத்திகளுடன் தங்கள் சீரியல்களை டிஆர்பியில் எகிற வைக்க படாத பாடுபட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த செம்பருத்தி தொடரில் கதாநாயகனாக நடித்தவர் கார்த்திக் ராஜ். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர். யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இவர் சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து இவர் புதிய சீரியல் ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுக்கப் போவதாக, சொல்லப்பட்டு வந்தது.

அந்த வகையில் ” கிருஷ்ணா ஹோலி” என்ற சீரியலின் ரீமேக்கான “கார்த்திகை தீபம்” என்ற புதிய சீரியலில் நடிக்க உள்ளார். இந்தத் தொடரில் இவருக்கு ஜோடியாக ஆர்திகா என்ற நடிகை நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான ப்ரோமோ ஜீ தமிழில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here