தமிழகத்தில் 14ம் தேதி வரை கனமழை..4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை .,வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தில் 14ம் தேதி வரை கனமழை..4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை .,வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 14ம் தேதி வரை கனமழை..4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை .,வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஏராளமான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் வரும் நவ.9ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 12ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இன்று ( நவம்பர் 07) சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here