ஒரே ஆண்டில் ஆயிரத்தை கடந்த முதல் இந்திய வீரர்…, வரலாறு படைத்த 360 நாயன் சூர்யகுமார் யாதவ்!!

0
ஒரே ஆண்டில் ஆயிரத்தை கடந்த முதல் இந்திய வீரர்..., வரலாறு படைத்த 360 நாயன் சூர்யகுமார் யாதவ்!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடி, அரைசதம் கடந்த இந்தியாவின் 360 டிகிரி நாயகன் சூர்யகுமார் இரண்டு அளப்பரிய சாதனைகளை படைத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சூர்யகுமாரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதில், சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி 4 சிக்ஸர் என பந்தை மைதானத்தின் 360 கோணத்திலும் பறக்கவிட்டு 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், இந்த போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருதையும் தட்டி சென்றார். இந்த போட்டியில் இவர் 61 ரன்கள் அடித்ததன் மூலம், நடப்பு ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 28 டி20 போட்டிகளில், ஒரு சதம், 9 அரைசதம் என ஒட்டுமொத்தமாக 1026 ரன்களை எடுத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் இவரை சாரும். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் கடந்த ஆண்டில் 29 டி20 போட்டிகளில் 1326 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, சூர்யகுமார் 23 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4 வது வீரராக இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில், யுவராஜ் சிங் (12 பந்துகளில்), கே எல் ராகுல் (18 பந்துகளில்) மற்றும் மீண்டும் யுவராஜ் சிங் (20 பந்துகளில்) அரைசதம் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here