“கவர்ச்சி புயல்” யாசிகாவோட சின்ன வயசு போட்டோவ பார்த்து இருக்கீங்கள?? அப்பவே வேற லெவல்!!

0

கவர்ச்சி புயல் என்று அனைவராலும் அழைக்கப்படும் யாஷிகா ஆனந்த் தனது சிறுவயதில் எப்படி இருந்தார் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அவரது சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் சமீபகாலத்திற்கு முன்பு சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி பல தரப்பு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான், நடிகை யாஷிகா ஆனந்த். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான யாஷிகா மிகவும் சிறு பெண்ணாக தமிழ் திரையில் அறிமுகமானார். கடந்த 2015 ஆம் ஆண்டு “இனிமே இப்படித்தான்” என்ற சந்தானத்தின் திரைப்படத்தில் நடிக்க இருந்தாராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், சில காரணங்களால் இவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின், இவர் நடிகர் ஜீவாவின் “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி நடித்தார். இந்த படங்களுக்கு பிறகு அடுத்தடுத்து சில தமிழ் திரைப்படங்களில் யாஷிகா நடித்தார்.

இருப்பினும், பெரிதாக புகழ் அடையாத யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் காரணமாக இவர் மிகவும் பிரபலமடைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் இயல்பாகவும், தனது வயதியினை விட முதிர்ச்சியாக இருந்தது அனைவரையும் ஈர்த்தது. ற்போது இவர் தமிழில் 5 திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “கலக்கப்போவது யாரு” மற்றும் “முரட்டு சிங்கிள்ஸ்” என்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா தலையெடுக்க காரணம் பள்ளி திறப்பா?? பிரச்சாரமா?? – ஆலோசனையில் தலைமை செயலாளர்!!

தற்போது அவரது சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிறுவயதில் குழந்தை தனமாக இருக்கும் அந்த புகைப்படங்கள் யாவும் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஸ்ருதி ஹாசனை போலவும் காட்சியளிக்கிறார் யாஷிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here