WTC 2023 பைனல்: விளையாடும் லெவனில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு…, இரு ஜாம்பவான்கள் ஓபன் டாக்!!

0
WTC 2023 பைனல்: விளையாடும் லெவனில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு..., இரு ஜாம்பவான்கள் ஓபன் டாக்!!
WTC 2023 பைனல்: விளையாடும் லெவனில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு..., இரு ஜாம்பவான்கள் ஓபன் டாக்!!

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள இந்த இறுதிப் போட்டியானது வரும் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் நாளையுடன் (மே 28) முடிவடைய உள்ளதால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஏற்கனவே இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் சீசனை இறுதிப்போட்டி வரை சென்று வெல்ல தவறியதால், இந்த முறை எப்படியாவது டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் ஜாம்பவானான ரிக்கி பாண்டிங் அவர்களது அணியின் பிளேயிங் லெவனை தற்போது தேர்வு செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க திரளும் பெற்றோர்கள்., நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!!!

ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த WTC பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (சி), நாதன் லியான், ஸ்காட் போலண்ட்

ரவி சாஸ்திரி தேர்வு செய்த WTC பிளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பாரத், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here