எங்கடா டேம்ல இருந்த தண்ணிய காணோம்.., ஒரு போனுக்காக அதிகாரி செய்த அதீத செயல்!!!

0
எங்கடா டேம்ல இருந்த தண்ணிய காணோம்.., ஒரு போனுக்காக அதிகாரி செய்த அதீத செயல்!!!
எங்கடா டேம்ல இருந்த தண்ணிய காணோம்.., ஒரு போனுக்காக அதிகாரி செய்த அதீத செயல்!!!

நாட்டின் பல்வேறு இடங்களில் மனிதர்களை வியக்க வைக்கக்கூடிய பல நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு போனுக்காக அரங்கேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தின் கோயிலிபேடா பகுதியில் உணவு அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் தான் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் தன்னுடைய விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் சத்தீஸ்கர் பகுதியில் உள்ள கெர்கட்டா அணைக்கு சென்றுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அங்கு ஜாலியாக பொழுதை கழித்து வந்த இவர் செல்பி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அவருடைய மொபைல் போன் அணையில் விழுந்து விட்டது. இதனால் இவர் போனை எடுப்பதற்காக அணையில் இருந்து 41 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேறியுள்ளார். இதையடுத்து இவர் மீது அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரி ராஜேஷ் விஸ்வாவிடம் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

WTC 2023 பைனல்: விளையாடும் லெவனில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு…, இரு ஜாம்பவான்கள் ஓபன் டாக்!!

விசாரணையில் அவர், போனில் முக்கியமான அரசாங்கத் தகவல்கள் இருந்ததாகவும், அதனால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இப்படி செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்ட போது மூன்று நான்கு அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை தான் வெளியேற்ற வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர் கொடுக்கப்பட்ட அளவை விட அதிகமான தண்ணீரை வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். பதவியில் இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்ததற்காக ராஜேஷை இடைநீக்கம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here