WPL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய RCB …, வரலாறு படைத்து அசத்தல்!!

0
WPL 2024: முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய RCB …, வரலாறு படைத்து அசத்தல்!!

இந்தியாவில் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடர் 5 அணிகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில், ஷஃபாலி வர்மா 44, லேனிங் 23, மரிசான் கேப் 8 என அடுத்தடுத்து, RCB அணியின்  ஸ்ரேயங்கா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

2024 TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? இப்படியும் கூட தயாராகலாம்? மாஸ் அப்டேட்!!!

இதனை தொடர்ந்து, நிதானமாக விளையாடிய டெல்லி அணி, RCB அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய RCB அணியில், சோஃபி டெவின் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப ஸ்மிருதி மந்தனா சற்று அதிரடி காட்டி 31 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 35 ரன்கள் அடித்து, பெங்களூரு அணியின் வெற்றியை 19.3 ஓவரில் உறுதி செய்தார். இதன் மூலம், RCB அணியானது, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், WPL தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here