தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த டெல்லி கேபிடல்ஸ்!!

0
தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்..., 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த டெல்லி கேபிடல்ஸ்!!
தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்..., 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த டெல்லி கேபிடல்ஸ்!!

WPLலில் மும்பை இந்தியன்ஸ் அணியானது, டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.

WPL:

மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இந்தியாவில் 5 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தலா 2 போட்டிகளின் முடிவில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளானது, ஒரு தோல்வி கூட பெறாமல் தலா 4 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை பிடித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் லீக் போட்டி நேற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், யார் தொடர் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்ப்பு நிகழ்ந்து வந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவரிலேயே 105 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக மெக் லானிங் 43 ரன்கள் விளாசி இருந்தார்.

106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 15 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக, யாஸ்திகா பாட்டியா 41, ஹேலி மேத்யூஸ் 32, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 23* மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் 11* ரன்கள் எடுத்திருந்தனர். இந்த வெற்றி மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது, WPLலில் தொடர் வெற்றிகளை குவித்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here