வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்தியா…, காலிறுதிக்கு தகுதி பெற்றதா? முழு விவரம் உள்ளே!!

0
வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்தியா..., காலிறுதிக்கு தகுதி பெற்றதா? முழு விவரம் உள்ளே!!
வேல்ஸ் அணியை வீழ்த்திய இந்தியா..., காலிறுதிக்கு தகுதி பெற்றதா? முழு விவரம் உள்ளே!!

உலக கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய அணி வேல்ஸ் அணியை 4-2 கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆனாலும், நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவற விட்டது. இருப்பினும் அதற்கான காரணங்களை இப்பதிவில் காணலாம்.

உலக கோப்பை ஹாக்கி:

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் 16 அணிகளுக்கு இடையே கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் D யில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தியும், 2வது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டிரா செய்தும், 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து, இந்த தொடரின், 3வது மற்றும் கடைசி லீக் போட்டியை இந்திய அணி வேல்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இந்த போட்டியில், இந்தியாவின் ஷம்ஷேர் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங் 22வது மற்றும் 33 வது நிமிடத்தில் கோல் அடிக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வேல்ஸ் அணியின் ஃபர்லாங் மற்றும் ஜேக்கப் டிராப்பர் 43 வது மற்றும் 45 வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

இதனால், ஆட்டத்தின் முதல் பாதியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து, நடைபெற்ற 2வது பாதியில், இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் (46′) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (60′) இரு கோல்கள் அடித்து, 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியால், 7 புள்ளிகளுடன் 2வது இடத்தை பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி நாளை மறுநாள் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here