வாத்தின் கொழுப்பில் பொறிக்கப்படும் உலகின் விலை உயர்ந்த French Fries.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை!!

0

உலகின் விலை உயர்ந்த French Fries தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நியூ யார்கை சேர்ந்த உணவகம். அந்த French Fries வாத்தின் கொழுப்பில் பொறிக்கப்படுவதாகவும் அசத்தலான ருசியுடன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் Serendipity3 என்ற உணவகம் உலகத்தின் மிக விலை உயர்ந்த  French Fries ஐ தயாரித்துள்ளது. இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 15,000. கடந்த ஜூலை 13 ஆம் தேதி அமெரிக்கா, தேசிய French Fries தினத்தை கொண்டாடியது. அந்த நாளில் Serendipity3 உணவகத்தின் உரிமையாளர்கள் இந்த காஸ்ட்லி French Fries பற்றி தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் இந்த French Fries கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த உணவகம் இரண்டாவது கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. இந்த காஸ்ட்லி French Fries வாத்து கொழுப்பில் பொறிக்கப்பட்டுள்ளதால் மிக சுவையாக இருக்கும் எனவும் இதன் மேல் 23 கேரட் உண்ணக்கூடிய தங்க துகள்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் Serendipity3 உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here