மெட்ரோ ரயில் நேரங்கள் மாற்றம் – ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு!!!!

0
மெட்ரோ ரயில் நேரங்கள் மாற்றம் - ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு!!!!
மெட்ரோ ரயில் நேரங்கள் மாற்றம் - ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு!!!!

சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் சேவை இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு…

கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து துறை, ரயில்வே துறை, விமான துறை என அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. கொரோனா 2வது அலை அதிகளவில் பரவி வந்தது. இதற்கிடையில் அரசு பல தளர்வுகளை கட்டுப்பாடுகளை விதித்தது. பின் கொரோனா பரவல் இப்பொழுது தமிழகத்தில் சற்று குறைந்து வருகிறது. அதனால் தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்துகள் 50% அளவில் பயணிகளை அனுமதித்து இயங்க உத்தரவிட்டது. நாளடைவில் மக்கள் பயணிக்கும் அளவு அதிகம் ஆனதால், பேருந்தின் எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வேலைக்கு செல்பவர்கள் அதிகம், அதற்கு மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். கொரோனா அச்சத்தால் மக்கள் அதை பயன்படுத்த தயங்கினர், ஆனால் இப்பொழுது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மீண்டும் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஏற்கனவே 9 மணி வரை இருந்த மெட்ரோ ரயில் சேவை நேரம் தற்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நேரத்தை நீடித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு...
மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு…
மெட்ரோ ரயில் கட்டுப்பாடுகள்

கடந்த சில நாட்களாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்களின் சேவை இருக்கும் என்று ரயில்வே அறிவித்தது. மக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையினை ஏற்று மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here