பெண்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 நிதியுதவி மட்டுமல்லாமல் ரூ.500க்கு சிலிண்டர்? முதல்வர் அறிவிப்பால் தெலுங்கானா வரவேற்பு!!!

0
பெண்களுக்கு ஜாக்பாட்., ரூ.2,500 நிதியுதவி மட்டுமல்லாமல் ரூ.500க்கு சிலிண்டர்? முதல்வர் அறிவிப்பால் தெலுங்கானா வரவேற்பு!!!

நாடு முழுவதும் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மூலம் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 50 நாட்கள் கடந்த நிலையில், ஆறு உத்தரவாத வாக்குறுதிகளில் ஆரோக்கிய ஸ்ரீ திட்டம் (10 லட்சமாக காப்பீடு உயர்வு), பெண்களுக்கு இலவச பயண வசதி ஆகிய இரண்டு திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் அதாவது நிறைவேற்றப்படாத உத்தரவாதமான நான்கு திட்டங்களில் மகாலட்சுமி திட்டம் (பெண்களுக்கு ரூ.2,500 நிதியுதவி) மற்றும் ரூ.500க்கு எல்பிஜி சிலிண்டர் வழங்கும் திட்டம் ஆகிய இவ்விரு திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இது அம்மாநில பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TET தேர்வர்களே…, உங்களுக்கான சிறந்த “ONLINE COURSE”…, மிஸ் பண்ணிடாதீங்க!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here