
சுஜா என்ற பெண், கணவனுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் தற்போது கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது.
கொலை முயற்சி:
கன்னியாகுமரி மாவட்டத்தில், கணவனுக்கு மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2 மாதங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முருகனுக்கும், நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த சுஜா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் இரவு வடிவேல் முருகனுக்கு தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடு திரும்பிய வடிவேல் முருகன் மனைவியின் நடவடிக்கையில் ஏதோ சந்தேகம் இருப்பதாக அறிந்து அவரை கண்காணிக்க ஆரம்பித்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும் திருமணத்திற்கு பின், எதார்த்தமாக இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, சுஜா தான் ஒருவரை காதலித்தாகவும் இப்போது அவரிடம் பேச்சு வார்த்தை எதுவும் இல்லை என்று கூறியது வடிவேல் முருகனுக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அவர் சுஜா செல்போனை எடுத்து வாட்ஸ் ஆப்பை செக் செய்துள்ளார். அப்போது சுஜா முன்னாள் காதலருடன் தொடர்பில் இருப்பது வடிவேல் முருகனுக்கு தெரிய வந்துள்ளது.
சினிமாவையே வில்லத்தனத்தால் உலுக்கிய ரகுவரனுக்கு இவ்வளவு அழகான மகனா?? புகைப்படம் உள்ளே!!
மேலும் வாட்ஸ்அப் conversation- னில் தனக்கு ஸ்லோ பாய்சன் வைத்திருப்பதாக மனைவி அந்த இளைஞரிடம் சொன்னதை வடிவேல் முருகன் பார்த்து விட்டார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகன் தன் மனைவி செய்த காரியம் குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். இந்த நிலையில் வடிவேல் முருகன் தன் மனைவி தன்னை கொலை செய்ய ஸ்லோ பாய்சன் கொடுத்தாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.