தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை அப்படியே மாற்றி ‘ஒய் திஸ் கொரோனா’ எனப் பாடியுள்ள பாடல் தற்போது ட்விட்டரில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
பிரபலமான ‘ஒய் திஸ் கொலவெறி’..!
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012 ம் ஆண்டு வெளியான படம் ‘3’. இந்த படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த பாடல் அளவிற்கு வேறு எந்தவொரு தமிழ்ப் பாடலும் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கொலவெறி’ ‘கொரோனா’ வாக மாறியது
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஜானி லிவரின் மகளான ஜேமி லிவர் தற்போது ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் வரிகளை அப்படியே கொரோனா வைரஸின் பாதிப்புகளை குறித்து அவரது நண்பர்களுடன் காமெடியான வரிகள் மூலம் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |