33 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை – என்னதான் காரணம்..?

0

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 752 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து உயர்வு..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினமும் அன்றைய ஆன்லைன் விலைகேற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை 752 ரூபாய் அதிகரித்து 33,328 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,166 ரூபாயாக உள்ளது.

காரணம் என்ன..?

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்வதால் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here