WFH வேலையை தேடுபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும்..அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்!!

0
WFH வேலையை தேடுபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும்..அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்!!
WFH வேலையை தேடுபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும்..அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்!!

தற்போதைய காலகட்டத்தில் இணைய மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மோசடி கும்பலின் பார்வை WFH வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள் மீது திரும்பியுள்ளது.

WFH வேலைவாய்ப்பு:

கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஏராளமானோர் WFH முறைக்கு மாறினர். இதையடுத்து தற்போது நோய் பரவல் குறைந்துள்ளதால் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்துள்ளது. இருப்பினும் சில ஊழியர்கள் WFH முறை தான் சவுரியமாக உள்ளதால், அலுவலகத்திற்கு திரும்ப தயக்கம் காட்டி வருகின்றனர்.

அடக்கடவுளே.., கடும் வெப்பத்தால் 15,000 பேர் உயிரிழப்பு.., உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!!

இதுமட்டுமல்லாமல் வேலையை ராஜினாமா செய்து வேறு வேலை பார்க்கவும் கிளம்பியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மோசடி கும்பல்கள், WFH வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பல மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த வகையில் கடந்த செப்., மாதம் தானேயைச் சேர்ந்த 35 வயது பெண் WFH வேலைக்கு தேர்தெடுக்கப்பட்டதாக ஒரு போலி நிறுவனத்தில் இருந்து வந்த செய்தியை அடுத்து, அந்த நிறுவனம் அவரிடம் இருந்து ரூ.10,70,000 மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் FACEBOOK-ல் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற விளம்பர இணைப்பைக் கிளிக் செய்ததால் ரூ.15.22 லட்சத்தை இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் WFH வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here