மேற்குவங்கத்தில் போலி தடுப்பூசி முகாமில் ரூ.1கோடி மோசடி – மத்திய அரசுக்கு கடிதம்

0
மேற்குவங்கத்தில் போலி தடுப்பூசி முகாமில் ரூ.1கோடி மோசடி - மத்திய அரசுக்கு கடிதகம்
மேற்குவங்கத்தில் போலி தடுப்பூசி முகாமில் ரூ.1கோடி மோசடி - மத்திய அரசுக்கு கடிதகம்

மேற்கு வாங்க மாநிலத்தில் போலி தடுப்பூசி முகாம் மூலம் மோசடி செய்துள்ளனர். தடுப்பூசி முகாமில் கொல்கொத்தா நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பியும் ஆன மிமி சக்கரவர்த்தி மற்றும் பலரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் வாந்தி, வயிற்று வலி, நீர்சத்து குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

போலி தடுப்பூசி முகாம் நடத்தி ரூ.1 கோடி மோசடி

மேற்குவாங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் தடுப்பூசி முகம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த முகாமில் மக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுள்ளனர் இவர்களுடன் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பியும் ஆன மிமி சக்கரவர்த்தியும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார், அதன்பின் அந்த முகாமில் தடுப்பூசி போட்டு கொண்ட அனைவருக்கும் வாந்தி, வயிற்று வலி, நீர்சத்து குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதனை அறிந்த காவல் துறையினர் முகாம் நடந்த இடத்தையும் முகாமிற்கு ஏற்பாடு செய்தவர்களையும் தேடி கண்டுபிடித்து விசாரித்தனர்.

போலி தடுப்பூசி முகாம் நடத்தி ரூ.1 கோடி மோசடி
போலி தடுப்பூசி முகாம் நடத்தி ரூ.1 கோடி மோசடி

அப்பொழுது அங்கு நடந்தது போலி முகாம் தடுப்பூசிகள் அனைத்தும் போலியே அந்த மருந்துகள் அனைத்தும் எதிர்ப்பாற்றல் மட்டுமே தரும் மருந்துகள் ஆகும், இதை ஏற்பாடு செய்வதற்காக தன்னை ஐஏஎஸ் அதிகாரி தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் ரூ.1 கோடி வரை முகாமிற்காக வசூல் செய்துள்ளதாக கூறினார்.பின் அவரையும் அவருடன் சேர்ந்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்க்குக் கடிதம்

இந்தமாறி போலி முகாம் நடத்துவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்குவங்க மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் இதுபோன்ற போலியான முகாம் மற்றும் அனுமதி இல்லாமல் முகாம்களை கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்துவதை தடுக்க வேண்டும்.

மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்க்குக் கடிதம்
மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்க்குக் கடிதம்

குறிப்பாக காஸ்பா பகுதியில் நடந்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் இன்னும் பெறவில்லை எனவே அவர்களுக்கும் மற்றும் இனி அடுத்து நடக்க இருக்கும் அனைத்துத் தடுப்பூசி முகாம்களிலும் சரியான தடுப்பூசி விவரங்கள் அதில் பதிவு செய்யப்பட வேண்டும்.உராய சான்றிதழ்களை டிஜிட்டல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ கொடுக்க வேண்டும் வேண்டும். என்று அந்த கடிதத்தில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர் ஹரி கிருஷ்ண த்ரிவேதிக்கு எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here