தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவுவதை தடுக்கவில்லை – தமிழக அரசின் விளக்கம்..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் தன்னார்வலர்கள் தானாக ஏழை மக்களுக்கு உதவி செய்யக்கூடாது எனவும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளை அணுகி உதவிகளை பொருளாகவோ அல்லது பணமாகவோ அளிக்கலாம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசு விளக்கம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

எவ்வாறு உதவலாம்..?

கொரோனா நிவாரண பொருட்களை ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் நேரடியாக வழங்குவதை தமிழக அரசு தடுக்கவில்லை எனவும் வழிமுறைகளை மட்டுமே அரசு வகுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள விளக்கத்தின் விபரம்,

  • ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவுவதற்கு தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
  • தன்னார்வலர்கள் அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் விரும்பும் பகுதிகளில் உதவ ஏற்பாடு செய்யப்படும்.
  • ஊரடங்கு அமலில் உள்ளதால் தன்னார்வலர்கள் உதவி செய்யும் வரைமுறைகள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது.
  • தன்னார்வலர்கள் தானாக ஏழைகளுக்கு உதவும் பொழுது மக்கள் மற்றும் உதவி செய்பவர்களை நோய்த்தொற்றில் இருந்து காக்கவே இத்தகைய விதிகள் கொண்டுவரப்படட்டு உள்ளது.
  • மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால் stopcorona.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்தால் அரசுடன் ஒருங்கிணைந்து தன்னார்வலர்கள் ஏழை மக்களுக்கு உதவலாம்.
  • பேரிடர் காலத்தில் உதவுவது போல் இதில் உதவினால் வைரஸ் பரவல் அதிகரித்து விடும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here