பிரபல விஷால் பட நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
பிரபல விஷால் பட நடிகர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய, பிரபல நகைச்சுவை நடிகர் ராமராஜன் தனது 72 வயதில் இன்று காலமானார்.

அதிர்ச்சி மரணம்:

தமிழ் சினிமாவின், முன்னணி இயக்குனரான பாலா  இயக்கத்தில், விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி  வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் பாத்திரத்தில் நடித்தவர் காமெடி நடிகர் ராமராஜன். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்த இவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்  கூட்டுறவு வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வு காரணமாக, படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் இவருக்கு மதுரையில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது 72 வயதில், நேற்று இரவு காலமானார். இவரது இறுதிச் சடங்கு இவரது சொந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகளத்தூரில்  நடைபெறும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ராமராஜ் மறைவுக்கு கோலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here