ஒரு சதத்தில் பல சாதனை புரிந்த விராட்.., வியப்பில் உறைந்த ரசிகர்கள்.., என்னடா லிஸ்ட் பெருசா போகுது!!

0
ஒரு சதத்தில் பல சாதனை புரிந்த விராட்.., வியப்பில் உறைந்த ரசிகர்கள்.., என்னடா லிஸ்ட் பெருசா போகுது!!
ஒரு சதத்தில் பல சாதனை புரிந்த விராட்.., வியப்பில் உறைந்த ரசிகர்கள்.., என்னடா லிஸ்ட் பெருசா போகுது!!

ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் சொல்ல முடியாத பல சாதனைகளை தனதாக்கி கொண்டு உற்சாகத்தில் தத்தளித்து வருகிறார்.

ஒரே ஒரு சதம் தான்!!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி 61 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் விளாசினார். சுமார் 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி நேற்று ருத்ர தாண்டவம் ஆடி அதிக ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 71-வது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் இந்த ஒரு சதத்தின் மூலம் விராட் பல சாதனைகளை அடைந்துள்ளார். அதாவது இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி(276) முதலிடத்தில் உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அடுத்ததாக இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரரும் இவர் தான். இதனை தொடர்ந்து ஆசிய கோப்பை நடப்பு சீசனில் அதிக பவுண்டரிகள், அதிக அரைசதங்கள், அதிக சதங்கள், அதிக சராசரி என அனைத்திலும் விராட் கோலி மட்டுமே முதலிடம் வகிக்கிறார். இது மட்டுமல்லாமல் சர்வதேச T20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிற்கு அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மீண்டும் விராட் கோலி முதலிடத்தை பிடித்து, ரோஹித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அவர் T20 கிரிக்கெட் தொடரில் இதுவரை 3,584 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 அரைசதங்கள், ஒரு சதம் அடங்கும். இதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 24,000 ரன்கள் கோலி கடந்துள்ளார். இதனை தொடர்ந்து T20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி(122) தான். அதுவும் T20 வரலாற்றில் தனது முதல் சத்திலையே இந்த சாதனையை புரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here