தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? ஊழியர்கள் வைத்த கோரிக்கை! அரசின் நிலைப்பாடு என்ன?

0

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள  திமுக அரசு, கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என, அரசு ஊழியர்கள் கழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊழியர்கள் கோரிக்கை:

தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் சி.பி.எஸ் ஒழிப்பியக்கம் என்ற பெயரில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இவர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது மாநிலத்தில் 2021 தேர்தலுக்கு முன், தற்போது ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு  தேர்தல் வாக்குறுதியில்  பல திட்டங்களை அள்ளி வீசியது.

  • 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கு  20% உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி 70 வயது நிறைவடையும்போது 10%, 80 வயது நிறைவடையும்போது 10% என  பிரித்து வழங்கப்படும்.
  • அரசு அலுவலர்களின் பிரச்சனை தீர்த்து வைக்க முக்கிய அலுவலர்கள் தலைமையில் மாநில நிர்வாக தீர்ப்பாயம் அமைக்கப்படும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு இதற்கும் முன் இருந்த ஊக்கத் தொகை வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல், இவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலவரை ஊதியம் வழங்கப்படும்.
  • அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலவரை ஊதியத்துடன் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு, ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
  • காவலர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை  மற்றும் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்படுவதுடன், உயிரிழந்தவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட வாக்குறுதிகள் உட்பட இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், இவற்றை உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் எனவும் சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here