சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி…, குறைந்த இன்னிங்ஸில் இத்தனை சதம்மா??

0
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி..., குறைந்த இன்னிங்ஸில் இத்தனை சதம்மா??
சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி..., குறைந்த இன்னிங்ஸில் இத்தனை சதம்மா??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்ததன் மூலம், பல்வேறு சாதனைகளை படைத்து அசத்தி உள்ளார்.

விராட் கோலி:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டிராபியின் 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்து அசத்தி உள்ளார். இவர், இந்த போட்டியில், 15 பவுண்டரிகள் உட்பட 186 ரன்களை விளாசி, டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, டெஸ்டில் 1205 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ள விராட் கோலி சர்வதேச அளவில் தனது 75 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 3 வடிவ தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான பட்டியலில், 4856 ரன்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில், சச்சின் டெண்டுல்கர் 6707 ரன்களுடன் தனது இடத்தை தக்க வைத்து உள்ளார்.

WPL: தொடர் வெற்றிகளை குவிக்கும் மும்பை இந்தியன்ஸ்…, எதிரணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்!!

மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், சச்சின் சாதனையையும் ஒரு சாதனை பட்டியலில் பின்னுக்கு தள்ளி உள்ளார். அதாவது, சச்சின் தனது 75 வது சதத்தை 566 இன்னிங்ஸில், பதிவு செய்தார். ஆனால், விராட் கோலி 552 இன்னிங்ஸில் தனது 75 வது சதத்தை பூர்த்தி செய்து, குறைந்த இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டி சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி, டெஸ்டில் 28, ஒரு நாளில் 46 மற்றும் டி20 யில் ஒரு சதங்களை அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here