
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், UP வாரியர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி உள்ளது.
WPL:
இந்தியாவின் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியானது, UP வாரியர்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற UP வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய UP வாரியர்ஸ் அணியில், கேப்டன் அலிசா ஹீலி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடி அரைசதம் (58) கடந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவரைத் தொடர்ந்து, வந்த வீராங்கனைகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பெவிலியன் திரும்பினர். இதனால், UP வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 50 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, 160 ரன்களை இலக்காக கொண்டு, மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
ஹேலி மேத்யூஸ் (12), யாஸ்திகா பாட்டியா (42) ரன்களில் வெளியேற, நாட் ஸ்கிவர்-பிரண்ட் (45) மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் (53) அதிரடியாக விளையாடி 17.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியானது, இந்த WPL தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.