சூர்யா கூட நந்தா படத்தில் நடிக்க இருந்தது சிவாஜியா? பிரபு கண்டிஷனால் மனம் மாறிய இயக்குனர் பாலா!!

0
சூர்யா கூட நந்தா படத்தில் நடிக்க இருந்தது சிவாஜியா? பிரபு கண்டிஷனால் மனம் மாறிய இயக்குனர் பாலா!!
சூர்யா கூட நந்தா படத்தில் நடிக்க இருந்தது சிவாஜியா? பிரபு கண்டிஷனால் மனம் மாறிய இயக்குனர் பாலா!!

இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா திரைப்படத்தில் நடிக்க வேண்டியது நடிகர் சிவாஜி கணேசன் தான் என்ற ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான தகவல்:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் நந்தா. கிட்டத்தட்ட சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்றால் அது நந்தா தான். அதன் பிறகு பாலாவுடன் சேர்ந்து அவர் நடித்த பிதாமகன் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் அடித்தது. இந்த நிலையில், நந்தா படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதற்காக, முதலில் நடிகர் சிவாஜி கணேசன் தான் கமிட் செய்யப்பட்டாராம் .

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அந்த சமயம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பிரபு இவரை இந்த படத்தில் கமிட் செய்ய வேண்டாம் என பாலாவுக்கு கண்டிஷன் போட்டு விட்டாராம். அதன் பிறகுதான், சிவாஜி இடத்தில் நடிகர் ராஜ்கிரணை நடிக்க வைக்கலாம் என பாலா முடிவெடுத்து, இந்த படத்தில் அவரை கமிட் செய்திருக்கிறார்.

பாட்ஷா படத்தில் நடிக்க இருந்தது மம்முட்டியா? அதுவும் எந்த கேரக்டரா? இத தடுத்ததே ரஜினி தானா?

கிட்டத்தட்ட சிவாஜிக்காக உருவாக்கப்பட்டு, சிவாஜியால் கைவிடப்பட்ட அந்த கேரக்டரை ராஜ்கிரண் கனகச்சிதமாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இந்த முக்கிய சீக்ரெட்ஸ் களை எல்லாம் நடிகர் ராஜ்கிரண் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here