விஜய் டிவி பிரபலத்திற்கு கிடைத்த விலைமதிப்பில்லா ப்ரோமோஷன்… சீரியல இல்லைங்க நிஜ வாழ்க்கைலயாம்!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் கதாநாயகன் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் வினோத் பாபு. அவரின் மனைவி சிந்து  தற்போது கர்ப்பம் தரித்து உள்ளார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் தங்களின் வாழ்த்து  மழையை பொழிந்து வருகின்றனர்.

சன் குழுமத்தில் ஒரு அங்கமான ஆதித்யா டிவியில் கோலிவுட் சம்பிரதாயம், காமெடிக்கு நாங்க கேரண்டி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு தொகுப்பாளராக திரைக்கு வந்தவர் வினோத் பாபு. இதனை அடுத்து இவர் கலர்ஸ் தமிழ் டிவியில் சிவகாமி என்ற சீரியலில் நடித்து உள்ளார். அதன் பிறகு விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்குள் நுழைந்தார்.

அதன் பின்னர் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல். இந்த சீரியலில் வேலு என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த சீரியலுக்கு பிறகு இவர் பல விஜய் டிவி ஷோக்களுக்கு அழைக்கப்பட்டு மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.

இந்நிலையில் இவர் தற்போது விஜய் டிவியின்  தென்றல் வந்து தீண்டும் போது என்ற புதிய சீரியலில் கமிட் ஆகி உள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில் இவர் சிந்து என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்  மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மூலம் அவரின் மனைவி முகத்தை காட்டினார். இந்நிலையில் தற்போது  அவரின் மனைவி சிந்து கர்ப்பம் தரித்து உள்ளார். இந்த செய்தி அறிந்த அவரின்  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here