ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை தென்மேற்கு பருவகாற்று மழை இருக்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

0
RED ALERT! மாநிலத்திற்கு தீவிர கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
RED ALERT! மாநிலத்திற்கு தீவிர கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்ய தொடங்கிவிட்டது. இதனால் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பரவலான மலை பெய்து வருகிறது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு கோவை நீலகிரி மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும் என ஸ்ஹ்ன்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பம்…

தென்மேற்கு பருவக்காற்று மழை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பெய்ய ஆரம்பித்துள்ளது. இன்று கோவை நீலகிரி மாவட்டடத்தில் லேசான மிதமான மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்கள் அதாவது வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை இந்த இரு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வரும் மற்ற மாவட்டங்களில் வானிலை வறண்ட நிலையில் இருக்கும் என்று அறிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்,

தென்மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பம்...
தென்மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பம்…

அதேபோல மேற்கு தொடர்ச்சி மலையை அருகிலுள்ள மாவட்டங்கள் ஆன கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் சற்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிகவும் லேசான மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு அரபி கடல் மற்றும் வங்க கடலில் கற்றாலுத்த தாழ்வு இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சம் 36 மற்றும் வெப்பநிலை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை நெருங்கி இருக்கும்.

மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

அதேபோல் வானம் மேகமூட்டத்துடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு இருக்கும் என்றும், வெப்பநிலை அதிகபட்சம் 36 மற்றும் வெப்பநிலை குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை நெருங்கி இருக்குமாம், ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதி மற்றும் கர்நாடக கடலோர பகுதியில் பலத்த காற்று அடிக்கும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here