விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற எப்படி அனுமதி தர முடியும்?? உயர்நீதிமன்றம் கேள்வி!!

0
vinayagar chathurthi celebration

பெரியகுளம் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் விழாவை நடத்த அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா எப்படி அனுமதி தர முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் இம்முறை பொது இடங்களில் சிலை வைக்கவும், நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகன், முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!

இதனை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் தினமும் 6,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட எப்படி அனுமதி வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார். இது போன்ற வழக்குகளை தொடுத்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி தெரிவித்து உள்ளார். மேலும் மனுதாரரே தாமாக முன்வந்து மனுவை திரும்ப பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும் நீதிபதி எச்சரித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here