விக்ரம் படத்தை வெளியிட கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! பிரபல நிறுவனம் பதிலளிக்க உத்தரவு!!

0
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!
எனக்கும் என்னோட ஜோடிக்கும் ராசி இல்லை - கணவரை நினைத்து புலம்பும் கமலின் விக்ரம் பட நடிகை!!

உலக நாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

அதிரடி தடை :

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அதிரடியாக உருவாகியுள்ள படம் விக்ரம். இந்த படம் வருகிற ஜூன் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்வு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. தற்போது, இந்த படத்தினை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கக் கோரி, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின், விசாரணையை அடுத்து, விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கு விசாரணை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, விக்ரம் படம் குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here