இந்த படத்தை திரையிடாமல் உறங்கப் போவதில்லை – கங்கணம் கட்டிக்கொண்ட கார்த்திக் சுப்புராஜ்!!

0

நடிகர் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் இந்த ஆண்டு திரையிடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என தகவல் வந்துள்ளது.

சோகத்தில் மூழ்கிய இயக்குனர்:

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் என்ற படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  தந்தையும் மகனும் இணைந்துள்ள முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.  வருகிற தீபாவளி நேரத்தில் இந்த படம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசை கட்டி கொண்டு நிற்பதால் இந்த படம் தீபாவளி அன்று வெளியிட வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இது ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விக்ரம் அதற்கு முழுக்கு போட்டுவிட்டார். இந்த நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆக அடுத்த ஆண்டு ஆகும் என்பதால் அதன் இயக்குனர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம். மேலும் இப்படத்தை சீக்கிரம் வெளியிட கார்த்திக் சுப்புராஜ் பல முயற்சிகளை எடுத்து வருகிறாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here