விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவு.., அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டம் – வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இரண்டு கொடிகள் பறந்து கொண்டிருந்த சமயத்தில், தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து மூன்றாவது கொடியை பறக்க விட்டவர் தான் கேப்டன் விஜயகாந்த். இவர் கெரியரில் எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்து, பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் சினிமாவை தாண்டி ஏழை எளிய மக்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல உதவிகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி மக்களுக்கு மேலும் நல்லது செய்ய வேண்டும் என்று தனியாக கட்சி ஆரம்பித்து அதில் செயல்பட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து அரசியலில் ஒரு கை பார்த்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் தற்போது மருத்துவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விஜயகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம். மேலும் அடுத்த 14 நாட்களுக்கு அவருக்கு சிகிச்சை வழங்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நுரையீரல் சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள டிரக்கியாஸ்டமி அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here