போட்டோஷூட்டில் அசத்தும் விராட் கோலி… வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
போட்டோஷூட்டில் அசத்தும் விராட் கோலி… வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி கடந்த ஆண்டு பார்மின்றி தடுமாறி வந்தார். ஆனால் சிறிய ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பி சர்வதேச டி20 யில் தனது முதல் சதத்தை பதிவு செய்து, சிறந்த கம் பேக் கொடுத்தார். அதுமட்டுமின்றி ஆசியக் கோப்பை, உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதை தொடர்ந்து  எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா (டெஸ்ட்) தொடருக்கு தயாராகும் வகையில் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் இத்தொடருக்கான பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் பிரபலமான PUMA தயாரிப்பிலான உடைகளை அணிந்து விராட் கோலி போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது இப்புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

வாகன ஓட்டிகளே…, டிசம்பர் 1 முதல் இது கட்டாயம்…, அதிரடி உத்தரவை பிறப்பித்த கர்நாடக அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here