சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய விஜயகாந்த் – ஆனாலும் இது தொடரனும்! மருத்துவர்கள் அறிவுரை!!

0
vijayakanth and premalatha discharge
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய விஜயகாந்த் - ஆனாலும் இது தொடரனும்! மருத்துவர்கள் அறிவுரை!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், பிரபல அரசியல் தலைவருமான விஜயகாந்த் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய நடிகர்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இவர், திடீரென அரசியல் பக்கம் திரும்பினார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்று, மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால், அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க ஆரம்பித்தார். கடந்த சில தினங்களுக்கு முன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு காலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.

இவர் வீடு திரும்பி இருந்தாலும் இவருக்கு ஒரு சில வழக்கமான சிகிச்சைகள் தொடர வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், இவருக்காக இவரது வீட்டின் அறையில் கொஞ்சம் மருத்துவ மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் இவர் பூரண உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து  வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here