அப்ப ஊக்கத்தொகை.., இப்ப பாடசாலை.., மாணவர்களை கவரும் நடிகர் விஜய்யின் திட்டம்!!

0
அப்ப ஊக்கத்தொகை.., இப்ப பாடசாலை.., மாணவர்களை கவரும் நடிகர் விஜய்யின் திட்டம்!!

சினிமாவில் நம்பர் ஒன்னாக இருந்து வரும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல நல்ல தொண்டுகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மார்க் எடுத்த கிட்டத்தட்ட 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். நேற்று கூட மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மாணவ- மாணவியர்களின் கல்விக்கு உதவும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் திட்டமிட்டுள்ளார். அதாவது மாணவ மாணவியருக்கு இலவச இரவு பாட சாலை அமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டம் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

“இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம்” – மீண்டும் வருகிறதா ரூ.1000? RBI முக்கிய அறிவிப்பு!!!

இதற்கான ஆலோசனை கூட்டம் தான் நேற்று நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த இரவு நேர பாடசாலைக்கு தேவையான இடம், அதற்கான வாடகை, ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நான்கு இடங்களுக்கு மேல் இந்த பாடசாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here