வெங்கட் பிரபுவை விஜய் செலக்ட் செய்ய இதான் காரணமா? கஸ்டடி பிளாப் ஆனாலும் அதிர்ஷ்டம் கைவிடலயேப்பா!!

0
வெங்கட் பிரபுவை விஜய் செலக்ட் செய்ய இதான் காரணமா? கஸ்டடி பிளாப் ஆனாலும் அதிர்ஷ்டம் கைவிடலயேப்பா!!
வெங்கட் பிரபுவை விஜய் செலக்ட் செய்ய இதான் காரணமா? கஸ்டடி பிளாப் ஆனாலும் அதிர்ஷ்டம் கைவிடலயேப்பா!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நடிகர்களின் ஒருவராக டாப்பில் இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தளபதி அடுத்த படத்தின் அப்டேட் குறித்து இப்போதே ரசிகர்கள் கேட்க தொடங்கி விட்டனர். அதன்படி தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

என்னது., ரவீந்தர் தம்பதி பிரிய போறாங்களா., அவரே போட்ட பதிவால் ரசிகர்கள் ஷாக்., உறுதி செய்த மகாலட்சுமி!!

வெங்கட் பிரபுவின் கடைசியாக வெளியான கஸ்டடி படம் அட்ட பிளாப் ஆன நிலத்தில், விஜய் எப்படி அடுத்த படத்தின் வாய்ப்பை வெங்கட் பிரபுவுக்கு கொடுத்தார் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து கூறியதாவது, நடிகர் விஜய்யை பொறுத்த வரை ஒரு படத்திற்கு ஓகே சொல்லிட்டார் என்றால் அதிலிருந்து பின் வாங்க மாட்டார்.

அவரின் முந்தைய படங்கள் வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அவர் ஒப்புக்கொண்டால் கொண்டது தான்.. அதனால் தான் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் லியோ படம் வெளியாவதற்கு பின்னரே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியிடுவதாக வெங்கட் பிரபு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here