தக்காளியே இல்லாமல் சூப்பரா 3 வகையான சட்னி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுவை தாறுமாறா இருக்கும்!!

0

கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை உச்சம் தொட்டு வருகிறது. மேலும் தக்காளியின் வரத்து குறைவே இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சாமானிய மக்களால் இந்த தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தக்காளியே இல்லாமல் சுவையான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்;

பீட்ரூட் – 100 கிராம்

சின்ன வெங்காயம் – 10

மிளகாய் வத்தல் – 5

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 டீஸ்பூன்

வெள்ளை பூண்டு – 2

இஞ்சி – சிறிய துண்டு

புளி – சிறிதளவு

செய்முறை விளக்கம்

இந்த பீட்ரூட் சட்னியை தயாரிப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் 1 டீஸ்பூன் உளுந்து மற்றும் 4 மிளகாய் வத்தல் போட்டு வதக்கவும். பின்பு அதில் 10 வெங்காயம், 2 வெள்ளை பூண்டு, புளி, இஞ்சி துண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்பு அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு போட்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது சட்னி
தயார்.

கேரளா சம்மந்தி (சட்னி)

தேவையான பொருட்கள்

தேங்காய் – 100 கிராம்

மிளகாய் வத்தல் – 3

சின்ன வெங்காயம் – 5

வெள்ளை பூண்டு – 2

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

இந்த கேரளா சம்மந்தி தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல், வெள்ளைப் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

மேலும் இப்போது இதில் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான கேரளா சம்மந்தி தயார்.

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்

தேங்காய் – 100 கிராம்

பொரிகடலை – 50 கிராம்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – சிறிய துண்டு

வெள்ளைப்பூண்டு – 2

செய்முறை விளக்கம்

இந்த சட்னி தயாரிப்பதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள தேங்காய், பொரிகடலை, பச்சை மிளகாய், இஞ்சி, வெள்ளை பூண்டு சிறிதளவு உப்பு போட்டு கொள்ளவும். இப்போது இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

இதன் பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் போட்டு தாளிக்கவும். இப்போது இதை சட்னியில் போட்டு கலந்து விட்டு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here