அப்போ அஞ்சலி வாழ்க்கை போச்சு.. இப்போ வாணி போஜனா – எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகர் தான்!

0
அப்போ அஞ்சலி வாழ்க்கை போச்சு.. இப்போ வாணி போஜனா - எல்லாத்துக்கும் காரணம் இந்த நடிகர் தான்!

கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருக்கும் வாணி போஜன் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. முன்பு அஞ்சலிக்கு ஏற்பட்ட மார்க்கெட் சரிவு வாணி போஜனுக்கும் நிகழ்ந்து விடுமோ என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வாணி போஜன்:

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற போராடும் நடிகைகளில் ஒருவர் வாணி போஜன். இவருக்கு என்று சின்னத்திரையிலயே ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. அந்த புகழால் இவர் வெள்ளித்திரையில் தடம் பதித்தார். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் நெஞ்சங்களை வெள்ளித்திரையில் மூலம் கவர்ந்தார் வாணி போஜன். அதாவது இவர் முதன்முதலில் நடித்த ஒ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் இணைந்துள்ளார் வாணி போஜன். ஆனால் தற்போது இவரை பற்றிய ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றுள்ளாராம். அப்போது வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் திரும்பிவிட்டாராம்.

இதே போல் நடிகர் ஜெய் நடிகை அஞ்சலிடம் முன்பு நடந்துகொண்டார். படப்பிடிப்பில் இருக்கும் பொழுது, அஞ்சலி நடிக்கும் காட்சிகளில் கூட ஜெய் தன் கருத்தை சொன்னாராம். அதன் பின்னர் அஞ்சலி மார்க்கெட் சரிந்து விட்டது. இப்பொழுது வாணி போஜனிடம் ஜெய் நெருக்கம் காட்டுவதால் அதே நிலைமை வாணி போஜனுக்கும் வந்து விடுமோ என திரைத்துறையில் கிசுகிசுக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here