மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு இதான் காரணம் – வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து!!

0
மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு இதான் காரணம் - வழக்கு குறித்து  உயர்நீதிமன்றம் முக்கிய கருத்து!!

உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் இருக்கும் முக்கிய தகவல்களை உயர் நீதிமன்றம், மருத்துவர் குழு அறிக்கையின்படி தனது கருத்தாக வெளியிட்டுள்ளது.

 உயர்நீதிமன்றம் கருத்து:

கனியாமூர் சக்தி பள்ளியில் 12ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக, இவரது பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் மாணவியின் 2 கட்ட பிரேத அறிக்கையில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக ஸ்ரீமதி தரப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவ குழுவின் அறிக்கை மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவக் குழுவின் 2 கட்ட பிரேத அறிக்கை ஆகியவைகளை பரிசோதித்துப் பார்க்கும்போது மாணவியின் மரணத்திற்கு பாலியல் வன்கொடுமையோ அல்லது கொலையோ காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.

பாடங்கள் குறித்த மன அழுத்தம் காரணமாகவே, மாணவி இறப்பு நிகழ்ந்து இருப்பதாகவும் இதற்கு ஆசிரியர் எந்த வகையிலும் காரணம் இல்லை என்பது தெளிவாகிறது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மட்டும் இல்லாமல், மாணவியின் பெற்றோர் தரப்பு, தெரிவிக்கும் எந்த கருத்துக்கும் ஆதாரங்கள் இல்லை என கூறியுள்ளது. மாணவி இறப்பு குறித்த நீதிமன்றத்தின் இந்த கருத்து தற்போது, பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here